1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. CSK players arrive in Chennai with the trophy

வெற்றிக் கோப்பையுடன் சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்கள்

ipl- chennai super kings
ஐபிஎல் -2023 , 16 வது சீசன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை கிங்ஸ் அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டைன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,    5வது முறையாக கோப்பையை வென்றது.

எனவே சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  இந்த நிலையில், வெற்றிக் கோப்பையுடன் இன்று சென்னை கிங்ஸ் அணி வீரர்கள்  மதியம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்கு விமான  நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு…. புன்னகைக்கான தூதரான சச்சின் டெண்டுல்கர்