விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..
2010ம் வருடம் வெளிவந்த ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. அடுத்து 9 வருடங்கள் கழித்து அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா. ஃபகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் திருநங்கையாக நடித்து தேசிய விருது பெற்றார் விஜய் சேதுபதி..
இந்த படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது மூன்றாவது படத்தை படத்தின் வேலையை தொடங்கி இருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்த படத்திலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளாராம்.
தியாகராஜா குமாரராஜாவுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இசைஞானியாம். ஆனாலும் முதல் முதலாக இந்த படத்தில்தான் அவருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.