'இந்தியன்’ படத்தின் 3ஆம் பாகம். உதயநிதி கொடுத்த மாஸ் தகவல்..!
கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
இந்தியன் 2 படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் இன்னும் அதிகம் இருப்பதாகவும் அந்த காட்சிகளை வைத்து இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் தயாரிக்க திட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் இன்னும் 20 நாள் படப்பிடிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த படத்தின் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் பெண்டிங் இருப்பதாகவும் அந்த பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Edited by Siva