வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (21:21 IST)

’மானுடர் அனைவரும் சமம்’’ ‘’மாமனிதன்’’ படம் பார்த்த கமல்ஹாசன் டுவீட்

MAAMANNAN
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  மாமன்னன். இப்படத்தில்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் படத்தின் ஆடியோ விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம், இயக்குனர் மாரி செல்வராஜ்,  தேவர் மகன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை  கூறியிருந்தார். இதற்கு சமூக ஊடகங்களில் ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.

இந்தப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘’மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை.  என் கருத்திற்கு வலிமை சேர்க்கும்  மாமன்னனுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ்  தன் டுவிட்டர் பக்கத்தில் ‘’பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல்ஹாசன்  சார் அவர்களுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், உதயநிதி ஸ்டாலின் , #MAAMANNAN திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்  சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.