1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (16:54 IST)

''புதிய உயரங்கள் தேடி''- 'இந்தியன் 2 'பட பிரதான காட்சிகளை பார்த்து ஷங்கரை பாராட்டிய கமல்!

shankar -kamal
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர்  நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’. இப்படம்  படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில்,  படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் தொடங்கி ஷூட்டிங்  தற்போது, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. படத்தில் கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஜூலை மாதத்தோடு முடியும் என்று கூறப்பட்டது.

சமீபத்தில் இந்தியன் 2 படத்திற்கு சென்னை ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்த 1.24 கோடி ரூபாயை கட்டணமாக செலுத்தி படப்பிடிப்பு நடத்தியதாகவும் தகவல் வெளியானது.  இந்தியன் 1 படத்தை காட்டிலும்  இந்தியன் 2 படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில். இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளைப் பார்த்த  நடிகர் கமல்ஹாசன்  இயக்குனர் ஷங்கரை பாராட்டி டுவீட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

‘’‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர்.

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.

அன்பன்
கமல்ஹாசன் ‘’என்று தெரிவித்துள்ளார்.

 
நடிகர்  கமல்ஹாசன் இப்படத்தின் காட்சிகளைப் பாராட்டியுள்ளதைப் பார்த்தால், இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படமாக இருக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.