ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும் என மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு அவரது மனைவி மேகலா என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு மீதான தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து தற்போது மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார்.
இன்றைய விசாரணையின் போது செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்
செந்தில் பாலாஜியை விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்த கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva