செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (17:10 IST)

79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையானது பற்றி ஹாலிவுட் நடிகர் உருக்கம்

robert de nero with 7th child
AARP என்ற அமெரிக்க இதழின் 50வயதிற்கு மேற்பட்டோருக்கான நேர்காணலில் தனது 7 வது பெண் குழந்தை ஜியாவை பற்றி நடிகர் ராமர் டி  நீரோ  உருக்கமாக  தெரிவித்துள்ளார்.
 
ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரும், 2 முறை ஆஸ்கர் விருது வென்றவருமான ராபர்ட் டி நீரோ 80 வயதில் தந்தையாகியுள்ளார். தற்போது அவர் டிஃபனி ஷென் என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.

இத்தம்பதியர்க்கு கடந்த ஆண்டு மே மாதம்  குழந்தை பிறந்தது.  நீரோ தனது 79 வது வயதில் 7 வது குழந்தைக்கு தந்தையானனார்.

இந்த நிலையில், AARP என்ற அமெரிக்க இதழின் 50வயதிற்கு மேற்பட்டோருக்கான நேர்காணலில் தனது 7 வது பெண் குழந்தை ஜியாவை பற்றி கருத்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், ‘’எனது கவலைகள் எல்லாம் அந்த குழந்தையின் முகத்தை காணும்போது மறைகிறது. அக்குழந்தையின் பார்வை, அன்புடனும், பரிவுடனும் என்னை ஏற்றுக் கொள்கிறது. என் 80 வயதில் தந்தையாகி இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.  என்னால் முடிந்தவரை அவளுடன் மகிழ்ச்சியாக இருப்பேன் ‘’என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.