ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (09:17 IST)

கரீபியன் கடலில் விமான விபத்து! பிரபல ஹாலிவுட் நடிகர் குடும்பத்தோடு பலி!

Christian Oliver
கரீபியன் கடல் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் அவரது மகள்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஹாலிவுட்டில் தி குட் ஜெர்மன், ஸ்பீட் ரேஸர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கிறிஸ்டியன் ஆலிவர். 51 வயதாகும் கிறிஸ்டியன் ஆலிவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் கரீபியன் தீவுகளில் சுற்றுலா சென்ற ஆலிவரும் அவரது மகள்களும் தீவை சுற்றி பார்க்க ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர்.

சிறிய ரக விமானம் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் தரையிறங்கியபோது திடீரென ஏற்பட்ட கோளாறால் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது இரண்டு மகள்கள் மற்றும் விமானி உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கோர விபத்தில் ஹாலிவுட் நடிகர் தன் குடும்ப உறுப்பினர்களோடு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K