ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (16:21 IST)

*#ம்மால தெறிக்க விடுறோம்.. ஏகப்பட்ட சென்சார் இருக்கும் போல! – வெளியானது Deadpool & Wolverine தமிழ் ட்ரெய்லர்!

Deadpool and Wolverine
மார்வெல் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த Deadpool & Wolverine படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.



சூப்பர்ஹீரோ படங்கள் பலவற்றை தயாரித்து உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம். கடந்த 2008ல் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இதுவரை 33 திரைப்பரங்களும் 12 வெப் சிரிஸ்களும் வெளியாகியுள்ளது. அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன், மார்வெல்ஸ் வரிசையில் தற்போது இதில் டெட்பூலும், வுல்வரினும் இணைகின்றனர்.

இருவருக்கும் தனித்தனி படங்கள் ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்தால் எடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இனி மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைய உள்ளதால் தற்போது வெளியாக உள்ள Deadpool & Wolverine ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் ஆகும். இந்த படத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு ஹ்யூ ஜாக்மென் லோகனாக வருவதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஜூலை 26ம் தேதி வெளியாக உள்ள Deadpool & Wolverine படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாகவே டெட்பூல் படங்கள் 18+ வயதினர் பார்க்கும் வகையிலேயே காட்சிகள், வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அப்படியே இந்த Deadpool & Wolverine படமும் உள்ளது என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. ட்ரெய்லரின் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும் அவை படமாக வெளியாகும்போது சென்சார் செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெட்பூல் மற்றும் வுல்வரின் இணைந்து செய்ய உள்ள இந்த சாகசத்தை காண மார்வெல் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K