1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (22:26 IST)

துபாயில் புதிய வீடு வாங்கிய அஜித்!

caa app
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். அஜித்துடன் இணைந்து திரிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்ற நிலையில், இப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிதி நெருக்கடியால் இப்படத்தை இப்போது ஷூட்டிங்கிற்கு இடைவெளி விட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதற்கிடையே நேற்று அஜித்தின் 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள  ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் தலைப்பு -''குட்  பேட் அக்லி ''என்று யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று வெளியானது.
 
இப்படம் வரும் ஜூனில் ஷூட்டிங் தொடங்கப்பட்டு,2025 ஆம் ஆண்டு,  பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் விடாமுயற்சிக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்குமார், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு, வீட்டிற்கு திரும்பினார். அவர் பூரண குணமடைய வேண்டுமென விஜய் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.
 
இந்த நிலையில் ஏற்கனவே துபாயில் வீடு வாங்கியிருந்த அஜித்குமார்,துபாய் மெரீனா என்ற முக்கிய இடத்திலும் இப்போது புதிய வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அஜித் அடிக்கடி வெளி நாடு மற்றும் துபாய் சென்றுவருவதால் அவர் சொந்தமாக வீடுகள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.