வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (10:58 IST)

கமலின் ஆளவந்தான் படக்காட்சியை நினைவூட்டும் ஜோக்கர் டிரைலர் காட்சி!

ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ஜோக்கர் முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில்,  ஹாக்கீன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’ திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம்  ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை பெற்றது. இந்த படம்  உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

அதன் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. இந்த டிரைலரில் இடம்பெற்ற ஒரு காட்சி கமல்ஹாசனின் ஆளவந்தான் படக் காட்சியை நினைவூட்டுவதை போல அமைந்துள்ளது. இதை சிலாகித்து கமல் ரசிகர்கள் அந்த காட்சிகளைப் பகிர, ஜோக்கர் காமிக்ஸ் நாவல் 1940 களிலேயே உருவாக்கப்பட்டு விட்டது. அதில் இருந்து கமல் தழுவி ஆளவந்தான் திரைப்படத்தை எடுத்திருப்பார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.