ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2024 (12:16 IST)

இல்ல.. இது எங்க ஜாக்கிச்சான் இல்ல..! ஜாக்கியின் 70வயது போட்டோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

Jackie Chan
90ஸ் கிட்ஸின் பேவரைட் நடிகரான ஜாக்கிச்சான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.



இணைய வசதிகள் இல்லா இன்பமயமான 90ஸ் காலத்தில் இருந்த சிறுவர்களுக்கு தமிழ் தாண்டி பரிச்சயமான ஹீரோக்கள் என்றால் அது அர்னால்ட், சில்வஸ்டர் ஸ்டாலோன் மற்றும் ஜாக்கிச்சான் தான். அப்போதெல்லாம் ஜாக்கிச்சானின் ஹாங்காங் திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வந்தன.

தி போலீஸ் ஸ்டோரி, ப்ராஜெக்ட் ஏ, சிட்டி ஹண்டர், ஆர்மர் ஆஃப் காட் என ஜாக்கிச்சானின் படங்களுக்கு இங்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் அன்று தொடங்கி இன்றும் இருந்து வருகிறது. சமீப காலமாக ஜாக்கிச்சான் படங்களில் நடித்தாலும் வயது மூப்பின் காரணமாக குறைவான ஆக்‌ஷன் காட்சிகளிலேயே நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘வேன்கார்ட்’ படமும் மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படமாகவே அமைந்தது.


இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கிச்சான் கலந்து கொண்டு பேசியுள்ளார். முடி நிறைய கொட்டி போய் வயதானவராக காட்சியளிக்கும் அந்த ஜாக்கிச்சானின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் தாங்கள் சிறுவயதில் இருந்து ரசித்து பார்த்து வந்த ஜாக்கியை இப்படி வயது முதிர்ந்த தோற்றத்தில் காண்பது கண்களை கலங்க செய்வதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் வயசெல்லாம் ஒரு விஷயமா என்று அடுத்தடுத்து 4 படங்களில் ஜாக்கிச்சான் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K