ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (17:18 IST)

கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனட்’ தமிழத்தில் ரிலீஸ் எப்போது?

tenet
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனட்’ என்ற திரைப்படம் இங்கிலாந்தில் ஆகஸ்ட் 26-ம் தேதியும், அமெரிக்காவில் செப்டம்பர் மூன்றாம் தேதியும் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா உள்பட இன்னும் பல நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான தேதியை நிர்ணயிக்கும் பணியில் உள்ளனர் 
 
அனேகமாக நவம்பர் 27 அல்லது டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பு படக்குழுவினர்களிடம் இருந்து விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது