1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (18:31 IST)

விஜய் ஆண்டனியின் அடுத்த பட படப்பிடிப்பு முடிந்தது! ரிலீஸ் எப்போது?

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
விஜய் ஆண்டனி நடிப்பில் மூடர் கூடம் நவீன் இயக்கி வந்த திரைப்படம் அக்னி சிறகுகள். இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் அருண்விஜய் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் முதல் மீராமிதுன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா உள்பட பல இடங்களில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது
 
ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்து வந்த தமிழரசன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் ’கோடியில் ஒருவன்’ என்ற படத்தில் நடிக்கத் துவங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது