வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2022 (08:48 IST)

மீண்டும் ரிலீஸாகிறது வசூல் மன்னன் “அவதார்”! – சர்ப்ரைஸ் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்!

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த அவதார் திரைப்படம் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியான திரைப்படம் அவதார். பண்டோரா என்ற கிரகத்தில் வசிக்கும் மக்களுக்கும், பூமியிலிருந்து செல்லும் மனிதர்களுக்கும் இடையேயான யுத்தத்தை கதைகளமாக கொண்ட இந்த படம் வெளியான சமயம் உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்தது.

ஹாலிவுட் படங்களிலேயே உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த படம் என்று முதல் இடத்தை பெற்றது அவதார். அவதார் படத்தை 5 பாகமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக சொன்ன ஜேம்ஸ் கேமரூன் “அவதார் 2” படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பரில் அவதார் 2 வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை அவதார் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார். சில நாட்கள் மட்டும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் இந்த படம் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.