1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:39 IST)

ஹாலிவுட் நடிகையை சந்தித்த கமல்ஹாசன் !

நடிகர் கமல்ஹாசன், பிரபல ஹாலிவுட் நடிகையைச் சந்துள்ளார்.இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்த்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து, ரூ.500 கோடி வசூலித்துள்ளது. இதையடுத்து,  இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் விரைவில் இந்தியன்-2 படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளது.

ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தியன் -2 படத்தை அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு தொடங்கியுள்ளார்.
kamalhasan

இந்த நிலையில், கமலின் அவ்வை சண்முகி, இந்தியன் ஆகிய படங்களில் அவருக்கு மேக்கப் போட்டவர், மைக்கேல் வெஸ்ட்மோரை கமல் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது மகளும் நடிகையுமான மெக்கன்சி  இருந்தார்.

எனவே, இந்தியன் -2 படத்தில் மெக்கன்சி நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.