திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:26 IST)

பிரபல் ஹாலிவுட் நடிகையை சந்தித்த கமல்… கூட இருப்பவர் யாருன்னு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் தற்போது அமெரிக்க சென்றுள்ள நிலையில் அங்கிருக்கும் அவரது புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.

நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு திரைப்படமும் வசூலிக்காத தொகையை விக்ரம் வசூலித்து கமல்ஹாசனை மீண்டும் நம்பர் 1 நடிகராக்கியுள்ளது. இதையடுத்து அவரின் இந்தியன் 2 படம்  மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படமும் தொடங்கபட உள்ளது.

இதற்கிடையில் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு பிரபல ஹாலிவுட் நடிகையான மெக்கென்சி கேட் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை புகைப்படத்தை பகிர்ந்துள்ள மெக்கன்சி “சமீபத்தில் நடந்த ஹைலைட்டான விஷயம். கமல்ஹாசன் அவர்களின் காதி நிறுவன உடையை என்னுடைய ஷோவில் அணிந்து தோன்ற ஆர்வமாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

மெக்கன்சி பகிர்ந்துள்ள புகைப்படத்தில் அவரின் தந்தையான மைக்கேல் வெஸ்ட்மோரும் இடம்பெற்றுள்ளார்.  இவர் வேறு யாருமல்ல கமல்ஹாசனின் அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் போன்ற படங்களின் மேக்கப் மேன் ஆவார். இவர் ஆஸ்கர் விருது வென்ற மேக்கப் மேன் என்பது குறிப்பிடத்தக்கது.