திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (08:45 IST)

25 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் ஜானி டெப்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நடிகர் ஜானி டெப், பிரபல நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை திருமணம் செய்துகொண்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் நல்லபடியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை அதன் பின்னர் விவாகரத்தில் முடிந்தது. 2017ல் இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டார்கள். அதன்பின்னர் 2019ல் பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதிய ஆம்பர் அந்த கட்டுரையில் ஜானி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் குடும்பவன்முறையை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது ஜானி டெப் மீது விமர்சனங்களை எழவைத்தது. அதன் காரணமாக அவர் நடித்த பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. இதனால் ஆம்பர் ஹெர்ட் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக ஜானி டெப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடந்த நிலையில் தற்போது தீர்ப்பு ஜானிக்கு ஆதரவாக வந்துள்ளது. மேலும் இழப்பீடாக ஆம்பர் ஹெர்ட் 15 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதையடுத்து அவர் இப்போது ஒரு படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளார். பிரபல ஓவியர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளாராம். இந்த படத்தை பிரபல நடிகர் அல் பசீனாவோடு இணைந்து தயாரிக்கவும் உள்ளார் என்று சொல்லப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு தி பிரேவ் என்ற படத்தை ஜானி டெப் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.