திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (14:31 IST)

அமெரிக்க வாழ் இந்திய அழகியாக ஆர்யா வால்வேகர் தேர்வு

arya walvekar
அமெரிக்காவில் நடைபெற அழகித் தேர்வில் 18 வயது இளம்பெண்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் சமீபத்தில் நடந்த அமெரிக்க வாழ் இந்திய அழகிப் போட்டியில் விர்ஜினாவைச் சேர்ந்த 18 வயது பெண் ஆர்யா வால்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

30 மாகாணங்களில் இருந்து சுமார் 74 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் அமெரிக்க மிஸ் இந்திய அழகியாக ஆர்யா வால்வேகர் முதல் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை, சவுமியா சர்மாவும் மூன்றாவது இடத்தை சஞ்சனா சேகுரியும் பிடித்தனர்.

சிறுவயது முதலே டிவி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலு பாலிவுட் சினிமாவிலும் நடிக்க வேண்டுமென்ற ஆசையில் இருந்த ஆர்யா வால்வேகர் தற்போது ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

இதன் மூலம் விரைவில் அவர் தனது கனவை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.