லோகேஷ் கனகராஜை பாராட்டிய நடிகர் பார்த்திபன்!
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர் பார்த்திபன். புதிய பாதை படத்தில் தொடங்கி இப்போது வரை பல புதிய முயற்சிகளின் வழி, ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.
ஒத்தை செருப்பு என்ற படத்தை இயக்கி அவர் நடித்தியிருந்த நிலையில், இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து, இவ்ர் ஒரே ஷாட்டில் இயக்கி நடித்துள்ள படம் இரவின் நிழல். இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், கமல்- லோகேஷ் கூட்டனியில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தைப் பாராட்டியுள்ளார். அதில், ஒரு புதுமையான 100 பேரை வைத்து இயக்கிவிடலாம், ஆனால், 4 ஸ்டார்களை வைத்து இயக்குவது கடினம். இந்தப் பணியை லோகேஷ் சிறப்பாகச் செய்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனை, வைத்து, இப்படம் இயக்கி வெற்றி பெற்ற லோகேசுக்கு பாராட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.