1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (19:23 IST)

தேமுதிகவில் உட்கட்சித்தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு

vijayakanth
தேமுதிகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
தேசிய முற்போக்கு திராவிட கழக அமைப்பு தேர்தல்‌ நடத்துவதற்கு தேமுதிகவின்‌ சட்ட விதிகளின்‌ படி தேர்தல்‌ பணி குழு அமைக்கப்படுகிறது.
 
தேர்தல்‌ பணிக்குழுவினர்‌ கீழ்க்கண்டவாறு தமிழகத்தில்‌ உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ தேர்த்‌... நடத்தும்‌ ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்‌. 
 
கழக அமைப்பு தேர்தல்‌ குக்கிராமங்களில்‌ உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத்‌ கிளை கழகங்கள்‌ துவங்கி, ஊராட்சி கழகம்‌, பேரூர்‌ வார்டு கழகம்‌, நகர வார்டு பூத்‌ கிளை சழகம்‌, நகர வார்டு கழகம்‌, மாநகராட்சி வட்டங்கில்‌ உள்ள பூத்‌ வாரியாக கிளை கழகம்‌, மாநகராட்சி வட்ட கழகம்‌, பகுதி கழகம்‌, பேரூராட்சி கழகம்‌, நகராட்சி கழகம்‌, ஒன்றிய
கழகம்‌, மாவட்ட கழகம்‌, தலைமை கழகம்‌ என அனைத்து கழக அமைப்புகளுக்கும்‌. கீழ்க்கண்டவாறு நான்கு கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும்‌ தேமுதிக அமைப்பு தேர்தல்‌ நடைபெறும்‌.