1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (15:52 IST)

யானை ஹிட்டுக்குப் பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கப் போகும் ஹீரோ!

அருண் விஜய் மற்றும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி கூட்டணியில் உருவான யானை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸானது. இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ‘யானை’  1500 திரைகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வார இறுதி நாட்களில் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிய யானை திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 12 கோடி வரை தமிழ் நாட்டில் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் ரிலீஸூக்குப் பின்னர் எந்தவொரு தமிழ்ப் படமும் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் யானை திரைபடம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இயக்குனர் ஹரி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் யானை படத்துக்கு ஹரி இயக்கத்தில் ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.