1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated: திங்கள், 20 மார்ச் 2023 (19:37 IST)

அடிக்கடி பசிப்பதும் ஒருவித நோயா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

அடிக்கடி பசி எடுப்பதும் ஒரு வித நோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேடுகள் கொழுப்புகள் வைட்டமின்கள் கால்சியம் ஆகியவை கண்டிப்பாக தேவை என்பதும் இவை உண்ணும் உணவில் தான் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில மணி நேரம் சாப்பிடாமல் இருந்தாலே பசி ஏற்படுவது இயல்புதான் என்றாலும் அடிக்கடி பசித்துக்கொண்டிருந்தால் உடல் நலனில் பிரச்சனை இருக்கிறது என்ற அர்த்தம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
எப்போதும் பசியாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் அடிக்கடி பசிக்கும் என்றும் பதற்றம் அதிகமாக இருந்தாலும் அதிகம் பசிக்கும்  என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் சாப்பிடும் போது கவனச் சிதைவாக இருந்தாலும் சாப்பிடும் உணவு திருப்தியாக இருக்காது என்றும் டிவி பார்த்துக் கொண்டும் செல்போன் பார்த்துக் கொண்டும் சாப்பிடுவது நல்ல பழக்கம் அல்ல என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
Edited by Siva