காலையில் நடைபயிற்சி முடிந்தவுடன் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடலாமா?
ஒரு சிலர் தினம் தோறும் நடைப்பயிற்சியை வழக்கமாக கொண்டிருந்தாலும் நடைபயிற்சி முடிந்தவுடன் எண்ணெய் பலகாரங்கள் மற்றும் காபி சாப்பிடுவதால் நடைபயிற்சியின் பலன் போய்விடும் என்று கூறப்படுகிறது.
நடை பயிற்சி முடிந்தவுடன் எண்ணெய் பலகாரங்கள் நொறுக்கு தீனிகள் வடை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நடைப்பயிற்சியினால் கிடைத்த பலன்கள் கிடைக்காமல் போய்விடும் என்றும் கூறப்படுகிறது.
எண்ணெய் பலகாரங்களுக்கு பதில் பாசிப்பயறு வேக வைத்த கொண்டக்கடலை ஆகியவற்றை சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது. உடற்பயிற்சி செய்தவுடன் பசிப்பது போல் தோன்றும் என்றும் ஆனால் அதற்காக எண்ணெய் பலகாரங்களை சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran