திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (14:06 IST)

6 செமீ வாலுடன் பிறந்த குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்..!

tail
6 செமீ வாலுடன் பிறந்த குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்..!
பிரேசில் நாட்டின் பெண் ஒருவருக்கு 6 லட்சம் மீட்டர் வாலுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் சமீபத்தில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் முதுகுக்கு கீழே ஆறு சென்டிமீட்டர் நீளத்தில் ஒரு வால் இருந்துள்ளதை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். 
 
உலகில் ஏற்கனவே வாலுடன் சில குழந்தைகள் பிறந்து இருந்தாலும் பிரேசில் நாட்டில் இவ்வாறு குழந்தை பிறப்பது முதல் முறை என்று கூறப்படுகிறது. ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வால் எந்த விதமான அசைவும் இல்லாத நிலையில் அந்த வாலில் உணர்ச்சிகள் இருந்ததாகவும் அதை ஊசியால் குத்திய போது குழந்தை அழுததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
முதுகு தண்டு வளர்ச்சியடையாமல் இருந்தால் இது போன்று வாலுடன் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
 
Edited by Siva