1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (15:54 IST)

1000 நாய்களுக்கு உணவளிக்காமல் பட்டினியால் சாகடித்த நபர்....

Dogs
உலகளவில் மக்கள் பெருமளவில் தங்கள் வீடுகளில்,செல்லப்பிராணிகளாக நாய்கள், பூனைகள் போன்றவற்றை வளர்த்து வருகின்றனர்.

இந்தச் செல்லப்பிராணிகள் உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும்  அதற்கு உரியவிலை கொடுத்து, வாங்கி வந்து வீட்டில் பராமரிப்பவர்களும் உண்டு.

சில நேரங்கள் நாய்கள், பூனைகள் செல்லப்பிராணிகள் என்பதைத்தாண்டி, அவை குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே ஆகிவிடுவதுண்டு.

இந்த நிலையில், செல்லப்பிராணிகளை கொடுமை செய்பவர்களும் உள்ளனர்.  தென்கொரிய நாட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், சுமார் 1000 நாய்களைத் தன் வீட்டில் அடைத்துவைத்து, அவைகளுக்கு சாகும் வரை உணவு கொடுக்காமல், கொடுமைப்படுத்தியுள்ளார்.

நாயைக் காணவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகாரளித்தபோது, இந்த விஷயம் தெரியவந்துள்ளது. முதியவருக்கு 3 ஆண்டுகள் தண்டனை கிடைக்கலாம் என தகவல் வெளியாகிறது.