இது நடந்தாத்தான் விஜய் பிரதமராக முடியும்!.. டி.கே.எஸ் இளங்கோவன் நக்கல்!...
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. 60 வருடங்களாக அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்துவந்த நிலையில் விஜயோ தனித்துப் போட்டியிட்டு எம்.ஜி.ஆர் வாங்கியதை விட 2 சதவீத வாக்குகள் சேர்த்து அதாவது 35 சதவீத வாக்குகளை பெற்று தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி எந்த கூட்டணியும் அமைக்காமல் தனித்து போட்டியிட்டு இவ்வளவு சதவீத வாக்குகளை பெற்றது இல்லை என தவெக தொண்டர்கள் பெருமைப்பட்டு சொல்லி வருகிறார்கள். அதோட நிற்காமல் அடுத்த பிரதமர் விஜய்தான் எனவும் அவர்கள் சொல்ல தொடங்கிவிட்டனர்..
சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தென்னிந்தியாவிலிருந்து ஒரு தமிழர் பிரதமராக வேண்டும் என்று கூறியிருந்தார். ஒருபக்கம் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் விஜய்தான் அடுத்த பிரதமர் என ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். இது தமிழக காங்கிரஸுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் விஜய் என்றால் டெல்லியில் ராகுல்காந்திதான்.. 2029 தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்..
ஒருபக்கம், எதிர்க்கட்சிகளோ விஜய் பிரதமர் என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய காமெடி. அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என கூறி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையை பெறவில்லை.. காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவை பெற்றுதான் விஜய் ஆட்சி அமைத்திருக்கிறார்.. அப்படி இருக்க அவரால் எப்படி பிரதமராக முடியும்? ஒரு காலத்தில் தமிழ்நாட்டை தனி நாடாக்கும் கோரிக்கை முன்வைத்தோம்.. அப்படி தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றினால் விஜய் பிரதமராகலாம் என நக்கலடித்திருக்கிறார்.