குறைந்த தங்கத்தின் விலை.. அடமான நகைகளுக்கு வந்த ஆபத்து..
கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் ஒரு சவரன் விலை ஒரு லட்சத்தை தொட்டது. அதன்பின் ஒரு லட்சத்தை தாண்டி ஒரு கட்டத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரத்தையும் தாண்டியது.
எனவே ஏழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் கூட தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதே நேரம் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை மளமளவென சரிந்து தற்போது ஒரு லட்சத்திற்கும் கீழே சென்று விட்டது. இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,600 ஆகவும், ஒரு சவரன் ரூ.92,800 ஆகவும் இருக்கிறது..
ஒருபக்கம், தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்கம் உச்சத்தில் இருந்த போது அதிகபட்ச தொகைக்கு நகை கடன் பெற்றவர்களின் நகை மதிப்பு தற்போது விலை சரிவால் குறைந்துவிட்டது.
இதனால் LTV (Loan to Value) அதிகரித்திருப்பதால் கூடுதல் நகைகளை அடமானம் வைக்குமாறோ அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியை உடனடியாக செலுத்துமாறோ வங்கிகளிலிருந்து வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
தவறினால் நகைகள் ஏலத்துக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நகையை அடமானம் வைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.