தவெகவில் அடுத்த சர்ச்சை. குடும்ப வன்முறை புகாரில் அமைச்சர் வெங்கட்ரமணன்...
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவி சங்கர் ஆகியோர் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கினர். தொகுதி பிரச்சனை தொடர்பாக தன்னை சந்திக்க வந்த கார்த்திக் என்பவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் மதுபோதையில் தாக்கியதாக புகார் எழுந்தது.
ஒருபக்கம் பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக அருள் விக்னேஷ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில்தான், தவெகவில் அடுத்த சர்ச்சையாக அமைச்சர் வெங்கட்ராமன் மீது அவரின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வெங்கட்ரமணன் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரின் மனைவி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமைச்சர் வெங்கட்ரமணன் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அந்த தேதியில் அமைச்சர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது.