1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Vodafone Idea Limited announces New Offer with Amazon

இதுவா நியூ இயர் ஆஃபர்...? முந்திக்கொண்ட வோடபோன் ஐடியா லிமிட்டெட்!

புத்தாண்டு சலுகை
கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் ஆன்லைன் விற்பனை மையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிச்சயம் பல சலுகைகளை வாரி வழங்கும். 
தற்போது புத்தாண்டு சலுகைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது வோடபோன் ஐடியா லிமிட்டெட். ஆம், வோடபோன் ஐடியா தங்களது பயனர்களுக்கு புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. 
 
புத்தாண்டு சலுகையாக தேர்வு செய்யப்பட்ட சலுகையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.30 மதிப்புடைய அமேசான் பே வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. 
 
இந்த அமேசான் பே வவுச்சர்களை பயன்படுத்தி மொபைல் பில், டிடிஹெச் ரீசார்ஜ், அமேசான் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு பில் செலுத்த பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
குறிப்பாக இந்த வவுச்சர்களை பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.95 சலுகையை தேர்வு செய்ய வேண்டும். இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டாத நிலையில் விரைவில் அறிவிப்பு வரும் என தெரிகிறது. 
 
இதற்கு முன்னர் வோடபோன் மற்றும் அமேசான் இணைந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சேவை சந்தாவில் 50% தள்ளுபடியை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
சென்னைக்கு வறட்சியா? வெள்ளமா? பஞ்சாங்கம் சொல்வது என்ன?