ஜியோ பிழைப்பில் மண்ணள்ளி போட்ட ஏர்டெல்: வோடபோனுடன் இணைய முடிவு!

Last Updated: வியாழன், 6 டிசம்பர் 2018 (15:49 IST)
இந்திய தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காலடி எடுத்து வைத்த அடுத்த சில மாதங்களிலேயே மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது. 
 
இந்த சரிவில் இருந்து மீள ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கியது. ஆனாலும், அதில் எந்த பயனும் இல்லை, நஷ்டம் மட்டுமே மிஞ்சியது. 
 
இதற்கு முன்னர் பலரால் பயன்படுத்தப்பட்டு வந்த நெட்வொர்க்கான ஏர்செல்லும் திவாலானதற்கு ஜியோ ஒரு காரணம் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் இனியும் நஷ்டத்தில் காலம் ஓட்ட முடியாது என ஏர்டெல் அதிரடி முடிவு எடுத்துள்ளது. 
ஆம், ஏற்கனவே வோடபோன் மற்றும் ஐடியா இணைந்தது போல இப்போது ஏர்டெல் - வோடபோன் ஐடியா லிமிட்டெட் இணைய உள்ளது. அதாவது, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து தங்களது ஃபைப்ர் நெட்களை பயன்படுத்த தனி நிறுவனத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளது. 
 
இந்தியாவில் உள்ள மொத்த இணைப்புகளில் வோடாபோன் ஐடியா நிறுவனம் 37.20% இணைப்புகளையும், ஏர்டெல் 29.38% இணைப்புகளையும், ஜியோ 21.57% இணைப்புகளை வழங்குகின்றன. இதில் ஜியோவின் வருமானம்தான் அதிகம். 
இப்போது எவ்வளவு வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறார்கள்? இணைப்புகளை வழங்குகிறார்கள்? என்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், இருக்கும் வாடிக்கையாளர்கள் வைத்து சம்பாதிக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி...? 
 
இந்த கேள்விக்கு ஏர்டெல் நிறுவனத்திடம் இருக்கும் பதில் இல்லை என்பதே. அதாவது ஏர்டெல் நிறுவனம் நஷ்டத்தில்தான் செயல்பட்டு வருகிறது. எனவேதான் ஏர்டெல் இந்த முடிவை எடுத்துள்ளதாம். இந்த திட்டம் மார்ச் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :