திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (13:50 IST)

பாகுபலின்னு நெனப்பு: யானைகளுடன் சண்டை போட்ட நபர்

ஜார்கண்டில் குடிபோதையில் யானைகளிடம் சண்டை போட்ட நபர் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்கண்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டினருகே குடிபோதையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கிராமத்திற்குள் ஒரு யானை கும்பல் புகுந்தது. யானையை கண்டு மக்கள் மரண பயத்தில் ஓட ஆரம்பித்தனர்.
 
அந்த நபரோ போதையில் ஓடாமல், அசராமல் யானையை நோக்கி ஓடி அதனிடம் மல்லுகட்டினார். நொடிப்பொழுதில் யானை கூட்டம் அவரை மிதித்தே கொன்றது. போதையில் செய்த செயலால் ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.