1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Today petrol and diesel rate at chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

petrol
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் 75 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் பொருட்களை வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் பயனை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  என்றும் விற்பனையாகி வருகிறது 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னை பாரிமுனை அருகே 256 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!