சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் கடந்த 73 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இன்று 74வது நாளாகவும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது
இரண்டு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது மக்களுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது
அதேபோல் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியையும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது