வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (16:53 IST)

டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடியின் சகோதரர் !

டில்லியில் இன்று நடக்கும் போராட்டத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்துகொள்கிறார்.

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  அனைத்திந்திய  நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று தலை நகர் டில்லியில், அரிகி, கோதுமை, உள்ளிட்ட சமையல்  எண்ணெய் ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்குவது குறித்த 9 கோரிக்கைகளை வலியுறித்தி, டில்லியில் உள்ள ஜல் மந்தரின் போராட்ட  நடத்தப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில், நியாய விலைக்கடை சங்கத்தின் துணை தலைவராகப் பதவி வசிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்துகொள்கிறார்.  இது பாஜக வட்டாரத்திலும் அம்மா நிலத்திலும் பரபரப்பை   ஏற்படுத்தியுள்ளது.