செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 ஜனவரி 2019 (14:17 IST)

ரூ.8000 விலை குறைப்பு: ப்ளிப்கார்ட் வழங்கும் அசத்தல் அசுஸ் டேஸ்!

அசுஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் ப்ளிப்கார்ட்டுடன் இணைந்து அசுஸ் டேஸ் என்னும் சிறப்பு விற்பனையை இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த விற்பனை ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும்.
 
இந்த விற்பனையில் அசுஸ் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் டேஸ் விற்பனையில் தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ...
 
1. அசுஸ் சென்ஃபோன் 5 இசட்: 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.8,000 குறைக்கப்பட்டு ரூ.28,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. 
2. அசுஸ் சென்ஃபோன் 5 இசட்: 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.8,000 குறைக்கப்பட்டு ரூ.24,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. . 
3. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1: 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.12,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. 
4. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1: 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. 
5. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.8,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. 
6. அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.4,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது.