செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (15:44 IST)

ப்ளிப்கார்ட், அமேசான் சலுகைக்கும் விற்பனைக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு

ஆன்லைன் விற்பனை மையங்களாக செயல்படும் இ காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.
 
அதாவது, ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள், தாங்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தங்களின் வலைதளங்களில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் இ காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனையாளர்களிடம், பொருட்களை தங்களின் தளத்தில் மட்டுமே எக்ஸ்க்ளூசிவ் ஆக விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. 
 
அதேபோல இரு இ-காமர்ஸ் நிறுவனத்தின் தளத்தில், ஒரே விற்பனையாளர் 25% அதிகமான பொருட்களை விற்க கூடாது. இந்த விதிமுறைகள் அனைத்தும் பிப்ரவரி 2019 முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.