திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (15:00 IST)

2018-ல் மேக்சிமம் சேல்: ஆப்பிள், சாம்சங்-ஐ தூக்கி சாப்பிட்ட சியோமி!

2018 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்கள் சேல் அமோகமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த ஆண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
 
1. 2018 ஆம் ஆண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டாக சியோமி இருந்தது.
 
2. சியோமிக்கு அடுத்த இடத்தில் ரியல்மி, ஹானர் மற்றும் அசுஸ் போன்ற பிராண்டு ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளன.  
 
3. தனிப்பட்ட ஸ்மார்ட்போன்களாக பார்க்கும் போது ரியல்மி 2 ஸ்மார்ட்போன் இருபது லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது.  
 
4. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பத்து லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது. 
5. பிரபலமானவை பட்டியலில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 5ஏ மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன. 
 
6. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக ரியல்மி 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்வை அதிகம் விற்பனையாகியுள்ளது. 
 
7. அதிகம் விற்பனையான விலை குறைந்த ஸ்மார்ட்போன் மாடலாக சியோமி ரெட்மி 5ஏ, ரெட்மி 6 மற்றும் ரியல்மி சி1 உள்ளிட்டவை இருக்கின்றன.
 
8. பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக ரெட்மி நோட் 5 ப்ரோ, ரியல்மி 2, ரெட்மி 6, ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரெட்மி 5ஏ உள்ளிட்டவை உள்ளன.