1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Reliance Jio to Introduce Jio Prime for Retail Merchants

மளிகை சாமான், காய்கறிக்கும் கேஷ்பேக்: அம்பானியால் திகைத்த ஜியோ பயனர்கள்!

ரிலையன்ஸ் ஜியோ
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மளிகை கடை, காய்கறி கடை மற்றும் பழக்கடை வணிகர்களை குறிவைத்து புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி ஜியோவின் ஆஃப்லைன் தளத்தை உருவாக்குவது குறித்து பேசினார். இந்த பேச்சு தற்போது கிரானா ஸ்டோர் என்ற திட்டத்தில் வந்து முடிந்துள்ளது. 
 
ஆம், கிரானா ஸ்டோர் என்பது ஹைப்ரிட் ஆன்லைன் டு ஆஃப்லைன் தளம் (Hybrid Online-to-Offline platform) என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிறு மளிகைக் கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள் கிரானா ஸ்டோரில் இணைக்கப்படும். 
இந்த ஸ்டோர் மை ஜியோ மொபைல் அப்ளிகேஷனுடன் இணைப்படும். அப்போது ஜியோ வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலை, கேஷ்பேக் என பல சலுகைகளுடன் தேவையான பொருட்களை வாங்கலாம். 
 
ஏற்கெனவே இந்த திட்டம் மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. 
 
குறிப்பு: இந்த சலுகைகள் அனைத்தும் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
போராட்டம் நடத்திய அர்ச்சகர்கள்- அத்திவரதர் தரிசனம் நிறுத்தம்