செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (13:11 IST)

போராட்டம் நடத்திய அர்ச்சகர்கள்- அத்திவரதர் தரிசனம் நிறுத்தம்

அத்திவரதர் கோவிலில் போலீஸை கண்டித்து கோவில் அர்ச்சகர்கள் போராட்டம் நடத்த தொடங்கியதால் அத்திவரதர் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தை காண ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அத்திவரதரை தரிசிக்க இருக்கும் விஐபி வரிசையின் வழியாக சில அர்ச்சகர்கள் போய் வந்து கொண்டிருந்திருக்கின்றனர். இதனால் கடுப்பான போலீஸார் அவர்களிடம் சும்மா சும்மா போய்வராதீர்கள் என்று சொல்ல, அர்ச்சகர்களுக்கும் போலீஸுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இது தெரிந்து மற்ற அர்ச்சகர்களும் வந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அத்திவரதர் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பிறகு அங்கு வந்த உயர் அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்துவைத்தனர். இதனால் சுமார் அரைமணி நேரம் தரிசனம் நடைபெறாமல் இருந்தது.