ஜியோவுக்கு அட்டாக் வரவைக்கும் ஏர்டெல் ஹாட் ஸ்பாட் ஆஃபர்!

Last Updated: வியாழன், 4 ஜூலை 2019 (12:45 IST)
ஏர்டெல் நிறுவனம் ஹாட் ஸ்பாட் சாதனம் வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
ஜியோவுக்கு நெருக்கடி தரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் ஹாட் ஸ்பாட் சலுகையை வழங்கியுள்ளது. புதிய 4ஜி ஏர்டெல் ஹாட் ஸ்பாட் வாங்க வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த சலுகை உள்ளது. 
 
ஏர்டெல் ஹாட் ஸ்பாட் சாதனத்தை வாடிக்கையாளர்கள் ரூ.2,000 கொடுத்து வாங்க வேண்டும். பின்னர் ரூ.399 அல்லது ரூ.499-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதோடு ரூ.300 ஆக்டிவேஷன் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இப்படி செய்ததும் ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்படும். கேஷ்பேக் தொகை போஸ்ட்பெயிட் கணக்கில் சேர்க்கப்படும். இதனை அடுத்தடுத்த மாத ரீசார்ஜ் கட்டணத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். 
 
ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜில் 50 ஜிபி டேட்டா மற்றும் ரூ. 499 ரீசார்ஜில் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :