தெறிக்கவிடும் ஜியோ ஐபிஎல் சலுகைகள்: வீடு, கார் மேலும் பல...

Last Updated: வியாழன், 5 ஏப்ரல் 2018 (13:29 IST)
இந்திய தொலைத்தொடர்பு துறையை புரட்டிபோட்ட ஜியோ தற்போது ஐபிஎல் போட்டிகளை வைத்தும் புது சலுகைகளை கொண்டுவந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் வரும் 7 ஆம் தேதி முதல் துவங்குகிறது. 
 
இதனை முன்னிட்டு ஜியோ, ஜியோ கிரிகெட் பிளே, ஜியோ கிரிகெட் சீசன் பேக் மற்றும் ஜியோ தண் தணா தண் நேரலை காமெடி நிகழ்ச்சி உள்ளிட்ட புதிய சேவைகளை அறிவித்துள்ளது. 
 
ஐபிஎல் போட்டியை முன்னிட்டு வழங்கப்படும் ஜியோ கிரிகெட் பிளே திட்டத்தில் கலந்து கொண்டு வாடிக்கையாளர்கள் பரிசுகளை வெல்ல முடியும். ஜியோ கிரிகெட் சீசன் பேக் திட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நேரலையை காண முடியும். 
 
ஜியோ தண் தணா தண் சலுகையில் நேரலை காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும். மேலும், ஜியோ கிரிகெட் சீசன் திட்டத்தில் 51 நாட்களும் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை மைஜியோ செயலி மூலம் பார்க்க முடியும். இதர்கு 102 ஜிபி டேட்டா ரூ.251க்கு வழங்கப்படுகிறது. 
அதோடு, ஜியோ கிரிகெட் பிளே அலாங் கேம் மைஜியோ செயலியில் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளின் போது நடைபெறும். 7 வாரங்கள், 60 போட்டிகளின் போது நடைபெறும் போட்டியை வாடிக்கையாளர்கள் 11 இந்திய மொழிகளில் விளையாட முடியும். 
 
இந்த போட்டியில் விளையாடி வெல்பவர்களுக்கு மும்பையில் ஒரு வீடு, 25 கார்கள், ரொக்க தொகை என பல்வேறு பரிசுகள் கிடைக்கும். 
 
ஜியோ அறிவித்திருக்கும் புதிய சலுகைகள் மை ஜியோ செயலியில் பெற முடியும். ஜியோ அல்லாமல் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :