வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2018 (12:03 IST)

ஜியோ காயின்; முற்றிலும் மோசடி: அம்பானி கூறுவது என்ன??

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவைகளை வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு குறைந்த கட்டண ரீசார்ஜ் சேவைகளை வழங்கி தனது வாடிக்கையாளர்களை நிலைப்படுத்திக்கொண்டது. 
 
ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு நம்பிக்கை தன்மையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இதை பயன்படுத்தி ஜியோ காயின் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

கிரிப்டோ கரன்சி என்ற ஒன்று தற்போது ஆன்லைனில் பிரபலமாகி வருகிறது. அதிலும் பிட்காயின் தற்போதைய நிலையில் வரத்தக சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் மதிப்பும் பல மடங்கு அதிமாகி வருகிறது. 
 
இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் ஜியோ காயின் எனும் செயலி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. ஜியோ காயின் செயலி குறித்த தகவல்கள் வேகமாக பரவிய நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதில், ஜியோகாயின் செயலி போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் ஜியோ காயின் பெயரில் காணப்பட்ட செயலிகளை 10,000 முதல் 50,000 பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். 
 
செயலி மட்டுமின்றி ஜியோகாயின் பெயரில் போலி வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. போலி செயலி மற்றும் வலைத்தளம் குறித்து ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ஜியோகாயின் பெயரில் காணப்படும் அனைத்து சேவைகளும் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை யாரும் டவுன்லோட் செய்து ஏமாற வேண்டாம் என கோரிக்கைவிடப்பட்டுள்ளது.