குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஏர்டெல்...

Airtel
Last Modified புதன், 28 மார்ச் 2018 (19:25 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட வாடிக்கையாலர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. 
 
புதிய ஏர்டெல் சலுகையின் விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்லது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி 3ஜி அல்லது 2ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
அதேபோல், ரூ.49 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் 28 நாட்களுக்கு 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா சலுகைகளையும் ஏர்டெல் வழங்குகிறது. 
 
குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதி மை ஏர்டெல் செயலி மூலம் தெரிந்துகொள்ளாம் என தெரிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :