வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவை விருது பெற்ற ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களுக்கான சிறந்த மொபைல் ஆபரேட்டர் சேவை பிரிவில் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் விருது பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சி பார்சிலோனாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் அதன் புது மாடல் மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி, விவோ போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு போட்டியாக அட்வான்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சிறந்த மொபைல் ஆபரேட்டர் சேவை பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்து தொலைத்தொடர்பில் புரட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.