புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (12:50 IST)

சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!

நோக்கியா நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5G இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என செய்திகள் வெளியாகின.


 
 
மேலும், இதை உறுதிபடுத்தும் விதமாக நோக்கியா, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது எனவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 5ஜி மொபைல் பிராட் பேண்ட் சேவை மையத்தை சென்னையில் துவங்கவுள்ளட்தாக நோக்கியா அறிவித்துள்ளது.
 
மொபைல் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல இந்தியாவில், குறிப்பாக சென்னையில் 5ஜி ஏர்ஸ்கேல் மல்டிபேண்ட் பேஸ் ஸ்டேஷன் மையத்தை அமைக்கவுள்ளது நோக்கியா.
உலகின் முதல் ட்ரிபிள் பேண்ட் ரேடியோ வசதிகொண்ட ஏர்ஸ்கேல் சேவையை கொண்டு வாடிக்கையாளர்கலுக்கு தடையற்ற இணைய சேவையை வழங்க முடியும் என தெரிகிறது.
 
ஆதாவது சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் இந்த மையம் துவங்கப்படவுள்ளது. நோக்கியாவின் இந்த ஏர்ஸ்கேல் மல்டிபேண்ட் பேஸ் ஸ்டேஷன் மையமானது 4ஜி சேவையை அடுத்து 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்கவுள்ளது.