1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Its raining in chennai people struk in traffic

சென்னையில் மீண்டும் மழை - பொதுமக்கள் அவதி

Chennai
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 3 வாரங்களுக்கும் மேல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. படிப்படியாக மழை குறையும் என வானிலை மையம் கூறியிருந்தது.  ஆனாலும், மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டே இருக்கிறது.
 
இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளமான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. மேலும், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 
படிப்படியாக மழை குறையும் என வானிலை மையம் அறிவித்திருந்ததால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. ஆனால், மழை பெய்து வருவதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பாகுபலி போல் முயற்சித்த நபர்; தூக்கி வீசிய யானை