5 புதிய திட்டங்களோடு அமர்களப்படுத்தும் ரிலையன்ஸ்!

Sugapriya Prakash| Last Modified புதன், 23 செப்டம்பர் 2020 (11:12 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் நெட்வொர்க் சேவைகளில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ள நிலையில், உலகளாவிய சந்தை மதிப்பிலும் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. 
 
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டங்கள்  ரூ.399 முதல் துவங்கி ரூ.1,499 வரை இருக்கின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றிலிருந்து இலவச OTT சந்தாக்களும் வழங்கப்படுகின்றன. 
 
மேலும், டேட்டா ரோல் ஓவர் வசதி, பேமிலி ஷேரிங் மற்றும் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் தரப்பட்டுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :