பெற்ற அப்பாவுக்கே இந்த நிலையா?..இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை வைத்து தந்தையை கொன்ற மகன்கள்
இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தந்தையை மகன்களே பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள அரசு பள்ளியில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்தவர் கணேசன். வயது (56) இவர் இவருக்கு மோகன்ராஜ், ஹரிஹரன் என்று இரு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணேசனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஒரு விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் வீட்டில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். கணேசன் மீது ரூபாய் மூன்று கோடி இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
இதில் இன்சூரன்ஸ் பணம் மற்ரும் அரசு வேலைக்கு ஆசைபட்ட இரு மகன்களும் தந்தையை கொல்ல திட்டமிட்டனர். இதற்கு உடந்தையாக அவரது நண்பர்கள் சிலரை சேர்த்துக் கொண்டனர். அதன்படி இவர்கள் கூட்டாக கணேசனைபாம்பு மூலமாக சாகடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று உறங்கி கொண்டிருந்த தந்தையை கட்டுவிரியன் பாம்பை கொண்டு கடிக்க வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கணேசன் பாம்பு கடித்து உயிரிழந்தார். எதங்களது தந்தை பாம்பு கடித்து இறந்து விட்டார் என்று இரு மகன்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்ஷூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் பெறுவதற்கு முயற்சி செய்துள்ளனர் அவரது மகன்கள்.
மகன்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலிஸார் விசாரனையை முடுக்கினர்.
விசாரணையில் இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேர் இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை வைத்து கணேசனை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.