திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (15:39 IST)

30 DAYS FREE TRIAL!! புது ரூட்டில் ஜியோ!!

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சில சலுகைகளை வாடிக்கையாளர்களை கவர அறிவித்துள்ளது. 
 
ஆம், ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் புதிதாக 30 நாட்கள் இலவச டிரையல் சலுகையை வழங்கியுள்ளது. ஆம் அதன் படி ரூ. 399, ரூ. 699, ரூ. 999, ரூ. 1499 என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
புதிய சலுகைகள் அனைத்திலும் அன்லிமிட்டெட் இணைய வசதி, வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதனோடு அதிக பட்ச ரீசார்ச் சேவையை தேர்வு செய்யும் போது நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, ஜீ5, சோனி லிவ், வூட், ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட ஒடிடி செயலிகளை இயக்கும் வசதியும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.